Thursday 23 October 2014

Thiruvalluvar's Birth Place is Boothapandi, Kanniyakumari

திருவள்ளுர் ஒரு சாலியர், மேலும் அவரின் பிறப்பிடம் மற்றும் வசிப்பிடம் தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தின் பகுதிகள்:

திருவள்ளுவரின் மொழி மற்றும் திருக்குறளில் கன்னியாகுமரி பகுதியின் தமிழ் சுவை தென்படுவதாக பலர் சொல்லுவதுண்டு. வள்ளுவர் வாழ்ந்த இடங்களை பற்றிய ஆராய்ச்சி இன்றும் தொடர்கிறது.

திருவள்ளுவர் பூதப்பாண்டியில் வாழ்ந்தார் எனவும்  சாலியர் மரபில் தோன்றியவர் எனவும் நிரூபிக்கலாம்.


  • சாலியர் சமூகத்தில் வள்ளுவன், வள்ளுவச்சி போன்ற பெயர்கள் இயல்பானது.
  • சாலியர்கள் நெசவுத்தொழிலை மையமாக கொண்டவர்கள் 
    • - வெண் துணிகள்  அல்லது நிறமற்ற வேட்டி நெசவு இவர்கள் மத்தியில் பிரசித்தம். 
    • - இதனை நிறங்கள் கொண்ட நெசவுக்கு முந்தய காலத்தோடு ஒப்பிடலாம்.
  • சாலியர்கள் பூதப்பாண்டியை பூர்வீகமாக கொண்டவர்கள்.
    • - பூதப்பாண்டிக் கோயில் மூலவருக்கு சாலியர் கணட திருமேனி என்ற பெயருமுண்டு.
    • - ஒவையாரம்மன் கோயில் அருகிலேயே இருக்கிறது. தமிழ் அறிஞர்கள் வாழ்ந்த இடம் எனலாம்.
    • - கன்னியாகுமரி பகுதியின் முதல் குடைவரை கோவில் 
    • - சாலியர்கள் சமண மதத்தினராகவும் பின்னர் சைவத்திலும் இருந்து தமிழ் பணி செய்திருக்கலாம்.
    • - பூதப்பாண்டி ஊர் தொன்மையானது. ஆதலால் தமிழ் இலக்கிய காலங்களோடு தொடர்புண்டு எனலாம்.
  • இச்சமூகத்தினர் பிற்காலத்தில் கோவில் புனரமைப்பின் போது வடசேரிக்கு குடியமர்த்தப்பட்டிருக்க வேண்டும், மேலும் சமண அழிவின் போது சைவத்திற்கு மாறியிருக்க வேண்டும். 
திருவள்ளுவர் கன்னியாகுமரி பகுதியைச் சார்ந்தவர் என்பதும் சாலிய மரபில் தோன்றியவர் என்பதும் நிரூபிக்கத் தகுந்தவை. பூதப்பாண்டி பகுதியில் சமணர் கால கல்வெட்டுக்கள் இருக்கக்கூடும், அவை கூடுதல் ஆதாரங்களைத்தரும்.

===>
சாலியரில் எந்த வகை என்பது மேலும் ஆராயப்பட வேண்டியது. வள்ளியூர் அல்லது குடுமி வகையினராக இருக்கக்கூடும்.

#Tamil #Thirukural #Thiruvalluvar #Boothapandi #Saliyar

Thiruvalluvar's Birth Place is Boothapandi, Kanniyakumari

திருவள்ளுர் ஒரு சாலியர், மேலும் அவரின் பிறப்பிடம் மற்றும் வசிப்பிடம் தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தின் பகுதிகள்: திருவள்ளுவரின் மொழி மற்...